அமெரிக்காவில் நடைபெற்ற பெண்கள் வாள்வீச்சு போட்டியில், 31 வயதான வீராங்கனை ஸ்டெஃபனி டர்னர், தன்னுடன் போட்டியிட இருந்தவர் டிரான்ஸ்ஜெண்டர் எனக் கூறி போட்டியில் பங்கேற்க மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. போட்டி தொடங்கிய சில விநாடிகளுக்குள் டர்னர் தரையில் அமர்ந்து தனது முகக்கவசத்தை கழற்றி விட்டு விளையாட மறுத்தார்.

 

“இது பெண்கள் போட்டி, நான் ஒரு பெண், அவர் ஒரு ஆணாக இருக்கிறார், எனவே நான் விளையாட மறுக்கிறேன்” என அவர் தெரிவித்தார். இதற்கு பதிலாக, USA Fencing அமைப்பு, அனைத்து பேரையும் சேர்க்கும் கொள்கையை பின்பற்றி அனைவருக்கும் போட்டியில் பங்கேற்க உரிமை இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்த சம்பவம், டிரான்ஸ்ஜெண்டர் வீரர்கள் பெண்கள் போட்டிகளில் பங்கேற்பது குறித்த சமூக விவாதங்களை மீண்டும் முன்னிலைக்கு கொண்டு வந்துள்ளது.