
இந்திய நடிகர் ஆன துல்கர் சல்மான் மலையாளத் திரை உலகில் தனக்கென சிறப்பான ஒரு இடத்தில் உள்ளவர். இவர் மலையாளத்தின் பிரபல நடிகர் மம்முட்டியின் மகன். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் “லக்கி பாஸ்கர்” என்ற படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில் தீபாவளியை ஒட்டி திரையரங்குகளில் வெளியிடப் பட குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்தப் பட பிரமோஷன் வேலைகளுக்காக துல்கர் சல்மான் தயாராகி வருகிறார். இது சம்பந்தமாக செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, செய்தியாளர் ஒருவர் அஜித் நடித்து ஹிட் கொடுத்த மங்காத்தா படம் போல இந்தப் படத்திலும் பணத்திற்கு முக்கியத்துவம் உள்ளது. எனவே நீங்கள் அஜித்குமாரின் ஸ்டைலை பின்தொடர்கிறீர்களா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த துல்கர் சல்மான், அஜித் மிகப் பெரிய ஹீரோ ஆவார். அவருக்கு நானும் ஒரு ரசிகன், இயக்குனரும் அஜித்தின் ரசிகர் தான். ஒருவரைப் போல பின்பற்றி செய்வது எனக்கு தெரியாது. அஜித் மிகவும் நல்ல மனிதர், மதிக்கக்கூடிய நபர். அவரைப் போல யாரும் நடிக்க முடியாது. இவ்வாறு செய்தியாளர்களிடம் துல்கர் சல்மான் கூறினார்.