இந்தியாவில் வருமான வரித்துறை நிறுவனத்தால் பான் கார்டு வழங்கப்படுகிறது. இந்த பான் கார்டு வருமான வரி செலுத்துவதற்கும், முக்கியமான அடையாள ஆவணமாகவும் திகழ்கிறது. இந்த பான் கார்டில் அனைத்து விவரங்களையும் மாற்ற முடியாது. ஆனால் சில சமயங்களில் பெயர்களை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். இந்நிலையில் பான் கார்டில் எப்படி பெயரை மாற்றலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதற்கு முதலில்‌ https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterCantact.html என்ற இணையதளத்திற்குள் சென்று அப்ளை ஆன்லைன் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு Changes or corrections in exciting PAN Data/Reprint of pan card என்ற ஆப்ஷனை கிளிக் செய்து தனிநபர் என்பதை தேர்வு செய்து அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும். அதன் பிறகு by submitting data to us and/or using our NSDL e-Gov TIN Website என்பதை தேர்வு செய்து கேப்சா குறியீட்டை உள்ளிட்டு சப்மிட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு வரும் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து பணத்தை செலுத்தினால் ஒப்புகைச்சீட்டு உருவாக்கப்படும். அதை அச்சிட்டு ஆவணங்களின் ஒரிஜினல் ஆதாரத்துடன் NSDL e-gov அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். அதன் பிறகு உங்கள் பெயர் மாற்றம் செய்யப்படும்.