தெலுங்கானா காச்சிகுடாவிலிருந்து மதுரைக்கு சிறப்பு கட்டண ரயிலானது இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஏப். 17-ம் தேதி முதல் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி வழியே மதுரைக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. அதன்படி ஏப். 24, மே 1 மற்றும் 8 தேதிகளிலும் ஜூன் மாதம் 5,12, 19, 26 ஆகிய தேதிகளிலும் இந்த ரயில் இயக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் காச்சிகுடாவிலிருந்து இரவு 8:50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:45 மணிக்கு மதுரையை வந்தடையும்.

அதோடு மதுரையிலிருந்து இந்த ரயில் ஏப். 19, 26 மற்றும் மே. 3,10, 17, 24, 31, ஜூன் 7, 14, 21, 28 போன்ற தேதிகளில் இயக்கப்பட இருக்கிறது. ரயில் மதுரையிலிருந்து அதிகாலை 5:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7:05 மணிக்கு காச்சிகுடா நிலையத்தை சென்றடையும். இப்போது இந்த சிறப்பு கட்டண ரயிலுக்கான முன் பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. தெற்கு ரயில்வேயின் இந்த புது ரயில் சேவை மதுரை வாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.