
டெல்லியில் நடந்த ஒரு சம்பவம் வாடகை வீட்டில் குடியிருப்பவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது 35 வயது பெண் ஒருவர் தனது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் குடும்பத்தில் உள்ள 3 வயது ஆண் குழந்தையை கடத்தியது தெரிய வந்தது. அந்தப் பெண் தன் சகோதரன் மனைவிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால் ஆண் குழந்தை இல்லாத காரணத்தால் இந்த ஆண் குழந்தையை கடத்தி தன் சகோதரன் மனைவிக்கு கொடுத்தது தெரியவந்தது.
குழந்தை காணவில்லை என தந்தையின் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது குழந்தை காந்தி மார்க்கெட்டை நோக்கி செல்கிறதை கண்டனர். பின்னர் விசாரணையில் சிசிடிவி உதவியுடன் குழந்தை உத்தர பிரதேசம் ஆம்ரோகாவில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.
மேலும் காவல்துறையினர் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன.