தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 13-ம் தேதி பொது விடுமுறை என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருப்பது பொதுமக்களிடையே கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு பலர் வரவேற்று வந்தாலும்,  நவம்பர் 18ம் தேதி வேலை நாளாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால் சில ஏமாற்றமும் சிலருக்கு ஏற்பட்டுள்ளது. காரணம், தீபாவளிய முன்னிட்டு ஏற்கனவே சனி,  ஞாயிறு என இரு தினங்கள் விடுமுறையை நன்கு கழித்துவிட்டு போதிய ஓய்வை எடுத்துக் கொள்ளலாம். அப்படி இருக்கும் பட்சத்தில்,  

திங்கட்கிழமை விடுமுறை என்பது கூடுதலான ஒன்றுதான்.  ஆனால் அதற்கு பதிலாக நவம்பர் 18 சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்திருப்பது கூடுதல் பணி சுமையாக சிலர் கருதுகின்றனர்.  ஆனால் வெளி மாவட்டங்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடிவிட்டு திரும்ப நினைப்போருக்கு திங்கட்கிழமை விடுமுறை ஆகச்சிறந்த ஒன்றாக தெரிகிறது.  எனவே தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்களிடையே கலவையான எதிர்வினைகளே  கிடைத்துள்ளன.