பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் ஹிருத்திக் ரோஷன். இவருடைய நடிப்பில் சென்ற 2019 ஆம் வருடம் வெளியாகிய “வார்” திரைப்படத்தின் வெற்றியை அடுத்து தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் நடந்து வருகிறது. இந்த திரைப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, அயன்முகர்ஜி டைரக்டு செய்கிறார்.

இத்திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகரான ஜூனியர் என்டிஆரை நடிக்க வைக்க பேசி வருகிறார்கள். இதற்கென ஜூனியர் என்டிஆருக்கு அதிக சம்பளம் பேசபட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.