தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. அதேபோன்று 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளும் நடைபெற்று தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இந்நிலையில் இன்று 10 மற்றும் 11ஆம் வகுப்புக்கான முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதி காலை 9 மணிக்கும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்நிலையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று உள்ளதாக  தமிழக அரசு தெரிவித்துள்ளது.