மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக மாடுகள் மற்றும் எருமைகளை திருடி வந்த நபர் ஒருவர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது அசோக் என்பவர் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா பகுதிகளில் மாடு மற்றும் எருமைகளை திருடி அதனை விற்று சம்பாதித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரை காவல் துறையினர் தேடி வந்த நிலையில் 2 ஆண்டுகள் கழித்து தற்போது தான் பிடிபட்டுள்ளார்.

அதாவது அவர் லாத்தூர் பகுதிக்கு வந்திருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் அங்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது போலீசாரை கண்ட அவர் தப்பிப்பதற்காக சுண்ணாம்பு கழிவகத்தில் உள்ள சாக்கடையில் சென்று மறைந்து கொண்டார். அவரது முகம் மட்டும் வெளியே தெரிந்த படி இருந்த நிலையில் அதனை கவனித்த காவல்துறையினர் அவரை வெளியே கொண்டு வந்தனர்.

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Sakal News பதிவைப் பகிர்ந்துள்ளார் (@sakalmedia)

அசோக் மீது கழிவும் மண்ணும் இருந்ததால் அதனை காவல்துறையினர் மீது வீசிவிட்டு தப்பிக்க முயற்சி செய்தார். ஆனால் அவரை காவல்துறையினர் வசமாக பிடித்து சென்றனர். பின்னர் அவரை சுத்தம் செய்த பிறகு கைது செய்த காவல்துறையினர் எந்தெந்த பகுதியில் மாடுகளை திருடினார்? எங்கு விற்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.