தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் பிஐபி உண்மை சரிபார்ப்பு பிரிவு இந்தியாவில் ஒருங்கிணைந்த முறையில் செயல்பட்டு தவறான தகவல்களை பரப்பிய ஆறு யூட்யூப் சேனல்களை கண்டுபிடித்தது. இந்த சேனல்கள் பரப்பும் போலி செய்திகளை நூற்றுக்கும் மேற்பட்ட உண்மை சோதனைகளை கொண்ட பின்னே உண்மை சரிபார்ப்பு பிரிவு ட்விட்டரில் இச்செய்தியை வெளியிட்டது.

ஆறு youtube சேனல்களும் தவறான தகவல்களை பரப்புவதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து கிட்டத்தட்ட 20 லட்சம் சந்தாதாரர்களை கொண்டிருப்பதாகவும் அவற்றின் வீடியோக்கள் 51 கோடி முறை பார்க்கப்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. பிஐபி தகவல் படி நேஷன் டிவி, சம்வாத் டிவி, சரோகர் பாரத் , நேஷன் 24 , ஸ்வர்னிம் பாரத், சம்வாத் சமச்சீர் ஆகிய ஆறு சேனல்கள் போலி தகவல்கள் பரப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஐபி உண்மை சரிபார்ப்பு பிரிவால் அமல்படுத்தப்பட்ட யூடுப் சேனல்கள் தேர்தல்கள், உச்சநீதிமன்றம் மற்றும் இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள நடவடிக்கைகள், இந்திய அரசின் செயல்பாடுகள் போன்றவற்றை பற்றிய போலி செய்திகளை பரப்புகின்றன. மின்னணு வாக்கு பதிவை இயந்திரங்கள் மீதான தடை தொடர்பான தவறான கூற்றுகள் மற்றும் மாண்புமிகு குடியரசுத் தலைவர், மாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி உள்ளிட்ட மூத்த அரசியலமைப்பு சட்ட பணியாளர்கள் மீது தவறான அறிக்கைகள் போன்றவை எடுத்துக்காட்டுகளாகும்.

இந்த ஆறு சேனல்களும் போலீ செய்திகளை பணம் ஆக்குவதில் செழித்து வளர்கின்றது. டிவி சேனல்களில் செய்தி தொகுப்பாளர்களின் போலியான புகைப்படத்தை பயன்படுத்தியும் பரபரப்பான சிறு படங்களை பயன்படுத்தி அந்த செய்தி உண்மையானது என்று பார்வையாளர்களை தவறாக வழிநடத்துகின்றன. பிஐபி உண்மை சரிபார்ப்பு பிரிவில் இத்தகைய இரண்டாவது நடவடிக்கை இதுவாகும். இதற்கு முந்தைய நடவடிக்கையில் உண்மை சரிபார்ப்பு பிரிவு 3 சேனல்கள் போலியான செய்திகளை பரப்புவதாக டிசம்பர் 2022 அன்று தெரிவித்திருந்தது.