
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்த நிலையில் இன்றும் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதேபோன்று நாளை கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வருகிற அக்டோபர் மாதம் 4-ம் தேதி மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இரு தினங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.