கடந்த சில தினங்களாக உத்திரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் அதிக மழை காரணமாக சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது மற்றும் சுரங்கப்பாதைகள் தாழ்வான பகுதிகளில் நீர் போக்குவரத்து அதிகமாகியுள்ளது.

இந்தநேரத்தில்ஃபரிதாபாத்தில் உள்ள சுரங்கப்பாதையில் நீர் அதிக அளவில் தேங்கியுள்ளது. இந்த வெள்ளத்தில் குருகிராம் செக்டார் 31 இல் தனியார் வங்கி மேலாளர் புண்ணியஸ்ரேயா ஷர்மா மற்றும் காசாளர் விராஜ் திவ்வேதி இருவரும் பணிகளை முடித்துவிட்டு மாலையில் தங்களது எஸ்யூவி சொகுசு காரில் வீடு திரும்பினர். பரிதாபாத் பழைய ரயில் சுரங்கப்பாதை அருகே வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டுள்ளது.

எனவே, செய்வதறியாது திகைத்தனர் அவர்களது சொகுசு கார் தண்ணீரில் மெல்ல மெல்ல மூழ்கியது. காரில் இருந்து இறங்கி நீந்தி செல்ல முயன்று உள்ளனர். இருப்பினும் தண்ணீரின் அளவு அதிகரித்ததால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்செய்தி அறிந்த காவல்துறையினர் அங்கு வந்து வெகு நேரம் தேடி இருவரின் உடல்களையும் கண்டுபிடித்துள்ளனர்.