
தமிழகம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக மதுரை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரி பாரனைத் தாண்டி பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் வெப்பக் கோளாறால் அவதிப்பட்டு வருகின்றனர்.
மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதேபோல், மதுரை நகர்ப்பகுதியில் 104 டிகிரி, தஞ்சாவூரில் 102 டிகிரி, திருச்சியில் 102 டிகிரி, ஈரோட்டில் 101 டிகிரி, நாகப்பட்டினத்தில் 101 டிகிரி, கரூர் பரமத்தியில் 100 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.