அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உலகப் பணக்காரர்களில் ஒருவரும், நிர்வாக சீர்திருத்தத் துறை தலைவருமான எலான் மஸ்கிருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துறையில் செலவுகளை குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது கார்ப்பரேட் கோடீஸ்வரரான எலான் மஸ்க் ஜனநாயகத்தை சீரழிப்பதை தடுக்க வேண்டும் என்று அவர்கள் குரல் கொடுத்தனர். எலான் மஸ்க் தன் சொத்து மதிப்பை மேலும் அதிகரிக்கவே இவ்வாறு செய்வதாக அவர்கள் குற்றம் சாட்டினர். முன்னதாக எலான் மஸ்கின் டெஸ்லா கார்களும் எரிக்கப்பட்டது. இவை அனைத்தின் பின்னால் சிலரின் தூண்டுதல் இருப்பதாக எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.