தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த ஜூன் 20ஆம் தேதி கூடிய நிலையில் துறை வாரியான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குறைந்த விலை மற்றும் சிறந்த சேவையில் HD செட் ஆப் பாக்ஸ் அரசு கேபிள் டிவி மூலமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜர் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இது குறித்து உரையாற்றிய அவர், தமிழகத்தில் இன்னும் இரண்டு மாதத்திற்குள் அனைத்து அரசு கேபிள்களிலும் HD செட் ஆப் பாக்ஸ் கொண்டுவரப்பட்டு அதன் பிறகு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.