ஒடிசா மாநிலத்தில்  உள்ள நிலாகிரி பகுதியில் பாகமாரா கிராமத்தில் வசித்து வந்தவர் சங்கி சிங் (45). இவரது கணவர் பாபாஜி சிங் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சங்கி சிங்கின் இரண்டு மகன்களும் அப்பகுதியில் தின கூலிகளாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் வழக்கம்போல வேலைக்கு சென்ற சங்கியின் இளைய மகன் துர்கா(25) சம்பவ நாளன்று வேலை முடிந்து சீக்கிரமாக வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருப்பதை கண்ட அவர் வீட்டில் உள்ளே எட்டிப் பார்த்துள்ளார்.

அப்போது தனது தாயார் அதே கிராமத்தைச் சேர்ந்த வேறொரு நபருடன் தகாத முறையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் பின் ஆத்திரமடைந்த துர்கா அருகில் உள்ள விறகு கட்டையை எடுத்து தாயை தாக்கியுள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் சங்கி வீட்டை  விட்டு வெளியேறி ஓடியுள்ளார். இருந்தும் துர்கா விடாமல் அவரைத் துரத்தி கிராமம் முழுவதும் பொதுமக்கள் முன்னிலையில் ஓட ஓட அடித்து தாக்கியுள்ளார். இதில் மயங்கி கீழே விழுந்த சங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.

அதன் பின் தாயின் உடல் அருகிலேயே மூன்று மணி நேரம் துர்கா இருந்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சங்கியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் துர்கா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து அவரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என துணை ஆய்வாளர் சுபர்ண பெஹாரா தெரிவித்துள்ளார். தகாத உறவில் இருந்த தாயை, மகன் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.