கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி சேர்ந்த 24 வயதான சஜு என்ற இளைஞர் தொடர்ச்சியாக பெண்களை காரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து நகைகளை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகல் நகர் பகுதியில் தனது காரில் கட்டிட வேலைக்கு சென்று கொண்டு இருந்த பெண்ணை வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை எனக் கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் அந்த பெண்ணிடம் உள்ள நகைகளை பறித்து விட்டு பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் சஜுவை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் அவர் கேரளாவை சேர்ந்தவர் என்பதால் கேரளாவில் உள்ள பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர்.

ஆனால் அவர் கர்நாடகாவில் இருந்தது தெரியவந்தது இதனை அடுத்து காவல்துறையினரின் தொடர் நடவடிக்கைகளால் சஜு கைது செய்யப்பட்டு கேரளாவிற்கு அழைத்துவரப்பட்டார். பின்னர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி காவல்துறையினருக்கு காத்திருந்தது. அதாவது கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் சஜூ இது போன்று பல பெண்களை காரில் அழைத்துச் சென்று பாலில் வன்கொடுமை செய்து நகைகளை பறித்துள்ளார்.

மேலும் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 வயதில் குழந்தை உள்ளது. கணவரின் நடத்தை சரியில்லாததால் மனைவி சஜுவை விட்டு பிரிந்து வாழ்ந்துள்ளார். அதனால் தொடர்ந்து காரிலேயே இதுபோன்று உல்லாசமான வாழ்க்கையை சஜு வாழ்ந்துள்ளார். மேலும் பல சிம் கார்டுகளை பயன்படுத்தி சமூக வலைதளங்களிலும் பல பெண்களை ஏமாற்றி வந்துள்ளார்.

இதனை அடுத்து அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் 50க்கும் மேற்பட்ட பெண்களை பாலில் வன்கொடுமை செய்த வீடியோக்கள் இருந்ததும் தெரிய வந்தது. இவர் மீது ஏற்கனவே இடுக்கி மாவட்டத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமுறைமாக வாழ்ந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது சஜு மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை மேலும் விசாரணை நடத்த கஸ்டடி எடுக்க வேண்டுமென நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.