ஐநா பொது சபை மார்ச் 15-ம் தேதியை இஸ்லாமோஃபியாவுக்கு எதிரான நாள் என நினைத்துள்ளது. அதன்படி இன்று இஸ்லாமோஃபியாவுக்கு எதிரான நாள் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு மற்றும் துன்புறுத்தலின் கேவலமான செயல்களால் வரலாறு நிரம்பியுள்ளது.

இது மனித குலத்தின் மீது ஒரு கறையாகவே இருக்கிறது. இஸ்லாமியர் வெறுப்பை எதிர்த்து போராடுவதற்கான சர்வதேச தினத்தில் சிறுபான்மையினரின் முறையான ஒடுக்கு முறையை எதிர்த்து போராடவும், அரசியல் விழுமியங்களுக்கு ஏற்ப அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் தீர்மானிப்போம் என்று பதிவிட்டுள்ளார்.