
1992 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் தனது இசை திறமையை வெளிப்படுத்தியவர் ஏஆர் ரகுமான். இசை புயல் என கொண்டாடப்படும் இவர் 32 ஆண்டுகளாக தனது இசையால் ரசிகர்களை கட்டி போட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று தனது 57வது பிறந்த நாளை கொண்டாடும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு கமலஹாசன் எக்ஸ் வலைதள பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் ஏஆர் ரகுமான் ஜி என்று குறிப்பிட்டு மீண்டும் உங்களுடன் பணி புரியவும் உங்களின் இசைக்காகவும் ஆவலாக இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
Happy birthday @arrahman ji. Looking forward to working with you again and to more great music for all from you. pic.twitter.com/a8VhrL6wNB
— Kamal Haasan (@ikamalhaasan) January 6, 2024