தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழிலதிபர் சோகைல் கதுரியா என்பவரை கடந்த டிசம்பர் 4ம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவரது திருமணம் “லவ் ஷாதி டிராமா” எனும் தலைப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கடந்த பிப்,.10 ஆம் தேதி வெளியானது. இத்தொடரின் முதல் எபிசோடில், ஹன்சிகாவும் அவரது தாயும் தங்களது கடந்த காலத்தில் நடந்த பிரச்சனைகளை பற்றியும், அதை சமாளிக்க அவர்கள் எடுத்த முன்னெடுப்புகள் குறித்தும் பேசுகிறது.

எபிசோட் அடுத்த கட்டத்தை எட்டும்போது, மணமகனும்-மணமகளும் சேர்ந்து ஜெய்ப்பூருக்கு வந்து திருமணத்திற்கு தயாராவதையும், போலோ போட்டிக்கு பின் தன் மெஹந்தி நாளில் டெர்பி நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்ற ஆசை பற்றியும் கூறுகிறது. ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. இதை ரசிகர்கள் பலரும் பார்த்து தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.