காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரவேலுக்குள் புகுந்து பயங்கர தாக்குதல் நடத்தியது. இதில் 1139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இஸ்ரேலில் இருந்து 251 பேர் பணைய கைதிகளாக காசாவிற்கு கடத்திச் செல்லப்பட்டனர். இதையடுத்து காசா அமைப்பு மீது போர் தொடுத்த இஸ்ரேல் பணைய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையில் ராணுவ நடவடிக்கை மூலம் இஸ்ரேலை மீட்டுள்ளது.

பணைய கைதிகளில் சிலர் ஹமாஸ் அமைப்பினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் நீக்கப்பட்டன. தற்போது ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இன்னும் 58 பேர் பணைய கைதிகளாக உள்ளனர். இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே போன்று பழைய கைதிகளை மீட்கவும் காச அமைப்பை ஒழிக்கவும் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி மற்றும் தரைவலி தாக்குதலை நடத்தி வருகிறது.

இதற்கிடையில் ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த யாஹ்யா சின்வார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் தாக்குதலில் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து புதிய தலைவராக யாஹ்யா சிம்வாரின் சகோதரரான முகமது சின்வார் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகும் என்று தெரிவித்துள்ளார்.

தெற்கு காசாவில் ஐரோப்பியா மருத்துவமனை அருகே நடத்தப்பட்ட வானொலி தாக்குதலில் சுரங்க அறையில் பதுங்கி இருந்த ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார். இந்த தாக்குதல் ஹமாஸ் ஆயுத அமைப்பின் ரபா படைப்பிரிவு தளபதி முகமது ஷபானாவும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்து ஹமாஸ் தரப்பில் இதுவரை எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.