குஜராத்தில் 24 மணி நேரத்தில் 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் நவராத்திரி தின விழாவை முன்னிட்டு கார்பா என்னும் பாரம்பரிய நடனம் ஆடப்படுவது வழக்கம்.  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் இந்த நடனத்தை ஆடி கொண்டாடி மகிழ்வர.  ஆனால் இந்த கார்பா நிகழ்வு நடைபெறக்கூடிய மாலை ஆறு மணி முதல் இரவு 2 மணி வரை ஏராளமான இதயம் மற்றும் மூச்சு திணறல் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் நிகழ்வில் கலந்து கொண்ட பலருக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வந்தன.  அதன்படி, 

இவ்வருடம் குஜராத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில்,  கார்பா  என்னும் பாரம்பரிய நடன நிகழ்வில் கலந்து கொண்டு ஆடிய 10 பேர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் ஆபத்தான போக்கை உணர்ந்த அரசும், இதில் பங்கேற்போரின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக கார்பா நடன நிகழ்வு நடக்கும் இடங்களுக்கு அருகே மருத்துவ  முகாம்கள்  அமைப்பது,

மருத்துவர்கள்,செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் என அனைவருக்கும் சிபிஆர் பயிற்சி வழங்குவது நிகழ்வில் பங்கேற்போருக்கு போதுமான தண்ணீர் வசதியை ஏற்படுத்தி கொடுப்பது,  ஆம்புலன்ஸ்கள் விரைவாக செல்வதற்கான பாதையை உருவாக்குவது, இக்கட்டான காலகட்டங்களில் விரைவாக நிகழ்ச்சியை முடிக்க வைப்பது என பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும், நிகழ்வை எடுத்து நடத்தும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் எடுத்து வரும் சூழ்நிலையிலும், இது போன்ற அசம்பாவிதங்கள் தொடர்ச்சியாக நடந்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.