இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வங்கிக்கு செல்வதை தவிர்த்து விட்டு அனைத்து பண பரிவர்த்தனைகளையும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பண பரிவர்த்தனைகளுக்கு கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட செயலைகளை மக்கள் அதிக அளவு பயன்படுத்துகின்றனர். அதனால் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு அவ்வப்போது பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கூகுள் பே மற்றும் போன் பே மாதிரியான யு பி ஐ அப்ளிகேஷன்கள் மூலம் நடைபெறும் மோசடிகள் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் 95 ஆயிரம் மோசடி வழக்குகள் இது தொடர்பாக பதிவாகியுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் இதை 84 ஆயிரம் ஆக இருந்தது. யுபிஐ பயன்பாடு அதிகரித்து வரும் அதே வேளையில் மோசடிகளும் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.