நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது. இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க மத்திய அரசு ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கி வருகிறது. தமிழகத்திலும் இந்த அரிசி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

செயற்கையான இந்த அரிசியை உண்பது உடல் நலனுக்கு தீங்கு என்ற சர்ச்சை தற்போது தொடங்கியுள்ளது. அதோடு வெளிமாநிலங்களில் இருந்து இந்த அரிசியை வாங்கினால் உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற புகார் எழுந்துள்ள நிலையில் இது தொடர்பாக ஆலோசித்து விரைவில் அரசு ஒரு முக்கிய முடிவை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.