பல்கலைக்கழக மானிய குழுவின் தலைவரின் பிரதிநிதியாக ஒருவரை தேடுதல் குழுவில் சேர்த்துள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேடுதல் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதிக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. கல்வியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேடுதல் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதிக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில் மட்டும் தமிழக அரசின் பிரதிநிதி இல்லாததால் தமிழக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 3 பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்ய தேடுதல் குழுவை ஆளுநர் தன்னிச்சையாக அமைத்துள்ளார் என  தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் ஆளுநர் ஆரன் ரவி அமைத்த தேர்வுக்குழு தொடர்பான அறிவிப்பை சட்டப்படி எதிர்கொள்வோம். பல்கலைக்கழக துணைவேந்தரை அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதாவிற்கு ஆளுநர்  ஒப்புதல் தரவில்லை. பேரவையில் நிறைவேற்றப்பட்டு 2022 ஏப்ரல் 28 மசோதா ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது எனவும் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தேர்வு குழு குறித்த விவரங்களை அரசுதான் அரசுதலில் வெளியிடும். ஆளுநர் அமைப்பு தேடுதல் குழு முழுக்க முழுக்க பல்கலைக்கழக சட்ட விதிகளுக்கு மாறானது. 3 பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்ய தேடுதல் குழுவை ஆளுநர்   தன்னிச்சையாக அறிவிக்கை  வெளியிட்டது மரபு மற்றும் விதி வீரர்களுக்கு முரணானது. இதுவரையில் எந்த ஒரு ஆளுநரும் தன்னிச்சையாக தேடுதல் குழுவினை அமைத்தது இல்லை எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.