
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வருபவர் சமந்தா. இவர் யசோதா திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சாகுந்தலம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து குஷி என்ற படத்திலும், ஹிந்தியில் சிட்டாடல் என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார். மயோசிடிஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா நீண்ட நாள்கள் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் நடிகை சமந்தாவிடம் ரசிகை ஒருவர் தயவு செய்து நீங்கள் யாரையாவது டேட் செய்யுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு நடிகை சமந்தா உங்களைப் போன்று என் மீது யார் அன்பு வைப்பார்கள் என்று பதிலளித்துள்ளார். நடிகை சமந்தாவின் இந்த பதிவு தற்போது ரசிகர்களை கவர்ந்து விட்டது. மேலும் இதற்கு ரசிகர் ஒருவர் உங்களை டேட் செய்ய ஏதும் விண்ணப்பம் உண்டா. இருந்தால் விண்ணப்பிப்போம். லவ் யூ சாம் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Who will love me like you do 🫶🏻 https://t.co/kTDEaF5xD5
— Samantha (@Samanthaprabhu2) March 26, 2023