
மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள போபாலில் பக்கோராடா என்ற பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் திடீரென போதை தடுப்புச் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 906 கிலோ மெபிடிரோன் கண்டறியப்பட்டது. இந்த வகையான போதை பொருள் அளவுக்கு அதிகமாக உபயோகித்தால் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை பாதித்து உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் போதை மருந்தாகும்.
இதனை யாருக்கும் தெரியாமல் அமித் பிரகாஷ் மற்றும் சந்திர சதுர்வேதி ஆகியோர் உற்பத்தி செய்து வந்துள்ளனர். இந்த போதைப் பொருளின் சந்தை மதிப்பு சுமார் ரூபாய் 1814 கோடியாகும். இந்த வகையான போதைப்பொருட்களை பல நாடுகளில் தடை விதித்துள்ளனர். சட்ட விரோதமான போதைப்பொருள் உற்பத்தியை செய்த அமித் பிரகாஷ் மற்றும் சந்திர சதுர்வேதி போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து குஜராத் உள்துறை அதிகாரி ஹர்ஸ் சங்கவி தனது இணையதள பக்கத்தில் தெரிவித்ததாவது, குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் தீவிர முயற்சியால் மிகப்பெரிய போதைப் பொருள்கள் கண்டறியப்பட்டது. மெபிடிரோன் கொடிய வகையான போதை பொருளாகும். இதேபோன்று முயற்சியால் போதைப்பொருள் அல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவோம் என பதிவிட்டிருந்தார்.