தமிழ்நாட்டு அரசு செப்டம்பர் 15 2023ம் ஆண்டு, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி தற்போது வரை அந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தற்போது புதிய ரேஷன் கார்டுகள் கொடுக்கப்பட்டு வருகின்றது. புதிய ரேஷன் கார்டுகளைப் பெற்ற மகளிர்களுக்கு உரிமை தொகை வழங்குவது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது அரசு பணியில் பணிப்புரியும் பெண்கள், ஓய்வு பெற்ற பெண்கள், பென்ஷன் வாங்கும் பெண்கள் மற்றும் வேறு வகையான அரசின் நிதிகளை வங்கியில் இருந்து பெரும் பெண்களுக்கு இந்த உரிமை தொகை வழங்கப்படாது. மேலும் பதிவு செய்த ஆவணங்களில் குளறுபடி ஏற்பட்ட பெண்கள், புதிதாக திருமணமாகி குடும்ப தலைவியான பெண்கள் ஆகியோர் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட உரிமை தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.