
பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில், சமையல் செய்வதற்காக எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் ஆண்டுக்கு 10 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் பெறும் மக்களுக்கு அரசாங்கம் மானிய விலையில் எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கி வருகிறது. இந்நிலையில் PhonePe நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கேஸ் சிலிண்டர் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது உங்க வீட்டில் கேஸ் தீர்ந்து விட்டால், அதை PhonePe மூலம் முன்பதிவு செய்தால், உங்களுக்கு கேஸ் சிலிண்டர் இலவசமாக கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வரையிலான நேரத்திற்குள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். மேலும் PhonePe வழங்கும் இந்த சலுகை டிசம்பர் 31 2025 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, வாலட் போன்ற எந்த முறையைப் பயன்படுத்தியும் PhonePe மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். ஆனால் ஒரு வாடிக்கையாளருக்கு ஒருமுறை மட்டுமே 100% கேஷ் பேக் கிடைக்கும் என்றும், இந்த சலுகை எந்த நேரத்திலும் திரும்ப பெற PhonePe-க்கு உரிமை உள்ளது என்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.