
இன்ஸ்டாகிராம் என்பது மெட்டா நிறுவனத்தின் ஒரு பொழுதுபோக்கு செயலியாகும். இதன் மூலம் ஒருவருக்கு ஒருவர் குறுஞ்செய்தி, புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் லொகேஷன் அனுப்பவும், பெறவும் முடியும். இந்நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு என்று அவ்வபோது புதிய அப்டேட்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியான புதிய அம்சம் குறித்து தற்போது பார்க்கலாம்.
அதாவது வாட்ஸ்அப்பை போல இன்ஸ்டாகிராமிலும் தற்போது பயனர்கள் தங்கள் பிரைவேட் சாட்டில் உள்ள மெசேஜ்களை பின் செய்வதற்கான அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதோடு இன்ஸ்டாகிராமில் உள்ள பாடல்களை டைரக்ட் மெசேஜ் மூலம் ஷேர் செய்யும் அம்சத்தையும் மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.