இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதி கொள்கை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய அறிவிப்புகளை அவர் அறிவித்தார். அக்டோபர் மாதம் நடந்த கூட்டத்தில், அவர் ரெப்போ வட்டி விகிதம் எப்போது குறைக்கப்படும் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது என்று கூறியிருந்தார். அதேபோன்று, இந்த கூட்டத்தில் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை, முன்பு இருந்த அதே வட்டி விகிதம் தொடர்கிறது. அதாவது 6.5 சதவீதம் வட்டி விகிதம் அப்படியே தொடர்கிறது. இது இப்படியே தொடர்வது இதோட 11வது முறையாகும்.
இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்து உணவுகளின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் சிறு குறு விவசாயிகளுக்கு பயனளிக்கும் விதமாக பிணையம் இல்லாத விவசாய கடன்களுக்கான வரம்பை 1. 6 லட்சத்திலிருந்து 2 லட்சமாக RBI உயர்த்தி உள்ளது. உணவு பொருட்கள் மீதான பணவீகத்தை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விவசாயிகளுக்கு எளிதாக மற்றும் மலிவாக கிடைக்கும் கடனை அதிகரிப்பதன் மூலம் நிலையான விவசாய உற்பத்தியை மேம்படுத்த RBI முடிவு செய்துள்ளது.