மூன்று வருடங்களுக்கு முன்பு வரை, SPAM அழைப்புகள் மக்களுக்கு மிகச் சுருக்கமாகவே வந்தன. ஆனால் தற்போதைய சூழலில், செல்போன் வைத்திருப்பவர்களுக்கு தினமும் ஏராளமான SPAM அழைப்புகள் வருகிறது. இது சிலருக்கு தலைவலியையும், மற்றவர்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

அறியாத எண்களில் இருந்து வரும் SPAM அழைப்புகள் நமக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதை Airtel நிறுவனத்தின் அறிக்கைகள் காட்டுகின்றன. தினமும் 60% பேர் குறைந்தது மூன்று SPAM அழைப்புகளைப் பெறுகிறார்கள். இதனால் பலரும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்ற தேவையை உணர்த்துகின்றது.

SPAM அழைப்புகளை தடுப்பதற்காக Airtel நிறுவனம் நவீன தொழில்நுட்பம் கொண்ட புதிய Anti-SPAM வசதியை அறிமுகம் செய்துள்ளது. இது Artificial Intelligence (AI) மற்றும் Network Intelligence தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, SPAM அழைப்புகளை கண்டறிந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்கிறது.

இந்த புதிய தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அதேசமயம், ஒரே இடத்தில் இருந்து தொடர்ந்து வரும் அழைப்புகளைக் கண்டறிந்து அவற்றை தடுக்கவும் Airtel நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.