அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ காப்பீட்டு விவரங்களை செயலி மூலம் அறியும் வகையில் புதிய செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் மற்றும் கையிருப்பில் உள்ள காப்பீட்டு தொகை போன்ற விவரங்களை TAMILNADU- NHIS என்ற செயலி மூலம் அறியலாம். மேலும் காப்பீட்டு திட்டத்துக்கான மின்னணு அடையாள அட்டையையும் அதில் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.