இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான 3வது ஒருநாள் போட்டியில் (IND vs SA 3rd ODI), இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் (Kuldeep Yadav), இந்தியக் கேப்டன் கே.எல். ராகுலிடம் (KL Rahul) ஒருமுறைக்குப் பலமுறை டி.ஆர்.எஸ் (DRS) கோரி கெஞ்சியச் சம்பவம் இணையத்தில் வேடிக்கையாகப் பேசப்பட்டு வருகிறது.

ஆட்டத்தின்போது, பந்து தென் ஆப்பிரிக்க வீரர்களின் பேடில் பட்ட போதெல்லாம், குல்தீப் எல்.பி.டபிள்யூ (LBW) அவுட்டிற்காகக் கேப்டனிடம் ரிவ்யூ (Review) எடுக்கும்படி வலியுறுத்தினார்.

குல்தீப் ரிவ்யூ கேட்டபோது, ஃபர்ஸ்ட் ஸ்லிப்பில் (First Slip) நின்றிருந்த முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma), குல்தீப்பை திரும்பிப் போகும்படி வேடிக்கையாகச் சைகை காட்டிச் சீண்டிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.

ரோஹித்தின் இந்த வேடிக்கையானச் செயலைக் கண்டு விராட் கோலியும் சிரித்தார். உண்மையில், குல்தீப் முதலில் ரிவ்யூ எடுக்கக் கோரிய சந்தர்ப்பங்கள் அவுட் இல்லை என்றும், கேப்டன் ராகுல் ரிவ்யூ எடுக்காதது சரியான முடிவுதான் என்றும் பின்னர் தெரிய வந்தது.