இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் பெரும் பரபரப்புடன் இன்றைய நாள்  முடிந்தது. திமுக கூட்டணி கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தனர். அதோடு பாட்டாளி மக்கள் கட்சி ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் உரையை புறக்கணித்தது.

இதனிடையே திமுக கட்சி கூட்டணி கட்சிகள் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தை தொடர்ந்து ஆளுநர் சட்டசபையில் உரையாற்றிய போது அரசு சார்பில் கொடுக்கப்பட்ட குறிப்பை முழுமையாக படிக்காமல் விட்டுவிட்டு,  சில வார்த்தைகளை தவிர்த்து உரையாற்றியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. ஆளுநர் உரை முடிந்த பிறகு பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலினும் ஆளுநரின் செயல் வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும் ஆளுநர் பேசிய விஷயங்கள் அவை குறிப்பில் இடம் பெறாது என்றும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தேசிய கீதம் முடிந்து அவை மரபு படி முடிவதற்கு முன்னதாகவே ஆளுநர் பாதியிலேயே வெளியேறினார். இதைத்தொடர்ந்து கெட் அவுட்  என்ற ஹேஸ்ட்டாக்கில் திமுகவினரை கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்கள். இது இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.