நாடு முழுவதும் அதிகரித்து வரக்கூடிய எரிவாயு விலையை குறைக்க அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறது. தற்போது அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் நாடு முழுவதும் புதிய எரிவாயு விலை நிர்ணய முறையை அறிமுகப்படுத்த இருக்கிறது. மேலும் கேஸ் விலையும் குறையும். நாட்டின் புதிய எரிவாயு விலை நிர்ணய முறை ஓஎன்ஜிசி மற்றும் இந்தியன் ஆயில் லிமிடெட் (ஓஐஎல்) ஆகிய எரிவாயு நிறுவனங்களின் வருமானத்தை குறைக்கும்.

சென்ற ஏப்ரல் 6-ம் தேதி அரசு இந்த புதிய வழிகாட்டுதல்களை அறிவித்தது. இதன் கீழ் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவின் விலையை மாதாந்திர அடிப்படையில் அரசாங்கமானது நிர்ணயிக்கும். இவ்விகிதம் முந்தைய மாதத்தில் இந்திய கச்சா எண்ணெயின் விலையில் (இந்தியாவால் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் சராசரி விலை) 10% ஆக இருக்கும்.

குறைந்த விலை வரம்பில் ஓஎன்ஜிசி அதன் எரிவாயு உற்பத்தியில் ஒரு யூனிட்டுக்கு குறைந்தபட்சமாக 4 அமெரிக்க டாலர் விலையைப் பெற முடியும் என S&P ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளது. சர்வதேச இயற்கை எரிவாயு விலை வரலாறு காணாத அடிப்படையில் குறைவாக இருந்தாலும் இதே விலை தான். அதேபோல் விலைகளின் உயர் வரம்பு ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கான வருவாய் வளர்ச்சியை கட்டுப்படுத்தும். அதிலும் குறிப்பாக இப்போது அதிகரித்துள்ள விலைகளின் மத்தியிலும் இது காணப்படும்.