
இன்றைய காலத்தில் நாட்டில் எரிபொருள் வாகனங்களை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். அதோடு தொழிற்சாலைகளில் இருந்து அதிகப்படியான புகையும் வெளியாகுகின்றது. இதனால் நாட்டில் காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் டெல்லியில் தொடர்ந்து காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது.
இதனால் 50% அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதற்காக புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது அரசு வெளியிட்டுள்ளது. இன்று மதியம் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. மேலும் விரைவில் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் என்று அரசு தெரிவித்துள்ளது.