
மக்களுக்கு திடீரென ஏற்படும் விபத்து மற்றும் எதிர்பாராத விதமாக ஏற்படும் மருத்துவ செலவுகளை ஈடுகட்ட மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு “ஆயுஷ்மான் பாரத் யோஜனா” என்ற திட்டத்தை அறிமுகம் செய்து மக்களுக்கு சுகாதார காப்பீடு வழங்கப்படுகிறது. இந்த காப்பீடை பெறுவதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்படுத்துள்ளது.
https://abdm.gov.in என்ற இணையதள பக்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலம் ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டை பயன்படுத்தி, உங்கள் தகுதியை உறுதிப்படுத்த வேண்டும். உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு பின்னர் இந்த காப்பீடு திட்டத்திற்கான AB-PMJAY என்ற ஐடி ஒதுக்கப்படும். இந்த ஐடி வந்த பின்பு உங்கள் டிஜிட்டல் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த காப்பீடு திட்டம் தனியார் மருத்துவ காப்பீடு வாங்க முடியாதவர்களுக்கு உதவியாக இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.