மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள திண்டோரி மாவட்டத்தில் 219 ஏழை ஜோடிகளுக்கு அரசு சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, தலா‌ ரூ. 56,000 நிதி உதவியும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு காங்கிரஸ் எம்எல்ஏ ஓம்கார் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் எந்த விதிமுறையின் கீழ் பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை நடத்தப்பட்டது என்பதற்கு அரசு விளக்கம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் இதுபோன்று எந்த ஒரு அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என திண்டோரி மாவட்ட ஆட்சியர் விகாஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். அவர் மணப்பெண்களுக்கு குறிப்பிட்ட நோய் தொடர்பான மருத்துவ பரிசோதனை மட்டுமே செய்யப்பட்டது. அப்போது சில பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை இருந்ததால் மருத்துவ குழுவினரே அந்த பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை செய்துள்ளனர். இதில் 4 பெண்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததால், அவர்களை திருமணத்திற்கு அனுமதிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.