
2015 ஆம் ஆண்டு, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம், இந்தியாவின் ஏழை மக்களுக்கு வீட்டு வசதி வழங்குவதற்காக தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் 2.0 பதிப்பு, வீடு இல்லாதவர்களுக்கு அரசு மூலம் கடன் மானியம் வழங்குகிறது. இதன் மூலம் பல லட்சம் குடும்பங்கள் வீடுகளை கட்டி கொள்வதற்கான உதவியை பெறுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ், நிரந்தர வீடு இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு வீடு கட்டுவதற்கு தேவையான மானியம் அளிக்கப்படும். குறிப்பாக, நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகள், குறைந்த வருமானம் கொண்டவர்கள் இதன் பலன்களை பெறலாம். தற்போதைய நிதியாண்டில் 3 கோடி வீடுகள் கூடுதலாக கட்டிடப்பட உள்ளன.
இந்நிலையில், மானியம் பெறுபவர்கள், வீடு கட்டும் பணியை நிறுத்தி வைத்தால் அல்லது அவர்களின் கடனை திருப்பி செலுத்த முடியாதபட்சத்தில், மானியம் திரும்ப பெறப்படும். மேலும், வீட்டு கட்டப்படும் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படாத பட்சத்தில், மானியத்தை அரசாங்கம் திரும்ப பெறும்.
இந்த திட்டத்தில் பயனடைவதற்கு, விண்ணப்பதாரர் குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பிய இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். வருடாந்திர வருமானம் LIG பிரிவில் 3-6 லட்சம், EWS பிரிவில் 3 லட்சம் க்கும் குறைவாகவும், MIG பிரிவில் 6-9 லட்சம் வரை இருக்க வேண்டும்.
PMAY 2.0 திட்டத்தில் விண்ணப்பிக்க https://pmaymis.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம்.