
கல்வி முன்னேற்ற கட்சியின் நிறுவனர் தேவநாதன் யாதவ். இவர் சென்னையில் இந்து நிதி நிறுவனம் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்த நிதி நிறுவனம் மூலம் அதிக வட்டி கொடுப்பதாக கூறி பொதுமக்களிடம் பணத்தை ஏமாற்றியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. நிதி நிறுவனத்தை நம்பி பல பொதுமக்கள் பல லட்சங்களை கொடுத்துள்ளதாகவும் கொடுத்த பணத்திற்கு வட்டி தொகை எதுவும் இதுவரை கொடுக்கவில்லை என தகவல்கள் வெளியாகிறது.
இதுகுறித்து சென்னை பொருளாதார குற்றவியல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேவநாதன் யாதவ் உட்பட 6 நபரை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் தேவநாதன் யாதவுக்கு ஜாமின் வழங்கக்கோரி மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனபால் கூறியதாவது, நிதி மோசடி செய்த தேவநாதன் யாதவுக்கு ஜாமீன் வழங்க கூடாது என உத்தரவிட்டு ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.