பிரான்சில் கடந்த செவ்வாய்க்கிழமை 17 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அந்நாட்டின் பல்வேறு இடங்களில் வன்முறைகள் வெடிக்க துவங்கியது. இதுவரை போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில் உயிரிழந்த சிறுவனின் பாட்டி வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “பள்ளிகள், பேருந்துகளை சேதப்படுத்த வேண்டாம்.

பேருந்துகளில் தாய்மார்கள் செல்வார்கள். எங்களுக்கு அமைதி வேண்டும். எனது பேரனை கொலை செய்த போலீஸ் மீது கடும் கோபத்தில் இருக்கிறேன். ஆனால் மற்ற போலீசார் மீது எந்த கோபமும் இல்லை. பிரான்ஸ் நிதி அமைப்பின் மீது தனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.