
வடக்கு ஆப்பிரிக்காவில் துனிசியா நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டின் பிரதமராக அலி லராயோத் என்பவர் 2013 முதல் 2014 வரை ஆட்சி செய்தார். அப்போது பயங்கரவாதத்திற்கு ஆதரவு கொடுத்ததாக அவர் மீது புகார் எழுந்தது. அந்த புகாரின் படி கடந்த 2022 ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது துனிசியா நாட்டிலிருந்து ஆயுத குழுவினரை சிரியாவில் நடைபெற்ற போருக்கு அனுப்பியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
அதில் அலி லராயோத் துனிசியாவில் இருந்து ஆயுதக் குழுவினரை அனுப்பியது உறுதி செய்யப்பட்டதால் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் தற்போது துனிசியா நாட்டின் அதிபராக கயிஸ் சையது பதிவேற்ற நிலையில் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார் என புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும் .