தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையிலிருந்து விடுதலை ஆவதற்கு வாழ்த்து தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டு இருந்தார். இதற்கு தற்போது தமிழிசை சௌந்தர்ராஜன் எதிர்ப்பு தெரிவித்த கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், எதிர்க்கட்சியில் இருந்தபோது துரோகியாக தெரிந்த செந்தில் பாலாஜி தற்போது ஆளும் கட்சிக்கு வந்தவுடன் தியாகியாக மாறிவிட்டாரா.? அதன்பிறகு எமர்ஜென்சி அடக்குமுறை கொண்டு ‌ வந்தவரோடு கூட்டணியில் இருந்து கொண்டு எமர்ஜென்சி காலத்தில் கூட இந்த அடக்குமுறை இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறுவதாகவும் பதிவிட்டுள்ளார்.

அதோடு முறைகேடு வழக்கில் கைதான ஒருவரை உறுதியானவர் என்று பாராட்டுவது வேடிக்கையானது என்றும் கூறியுள்ளார்.‌மேலும் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் இருந்து அவருக்கு என்ற சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் உன்னுடைய தியாகம் அளப் பெரியது. அதைவிட உன் உறுதி பெரியது. வருக வருக என பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.