பாஜக கட்சியில் இருந்து விலகிய கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகதீஸ் செட்டர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். பாஜக கட்சியில் போட்டியிட தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் நேற்று ஜெகதீஷ் செட்டர் கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். மேலும் இது பாஜக மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.