நீண்ட காலமாக விளையாடாமல் இருக்கும் பும்ராவை தற்போது மறந்து விடுங்கள் என இந்திய முன்னாள் வீரர் மதன் லால் கருத்து தெரிவித்துள்ளார். இன்றைய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக கடந்த ஆண்டு நடந்த பல்வேறு தொடர்களில் பங்கேற்கவில்லை. அது மட்டும் இன்றி கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாக அந்த தொடரில் இருந்தும் விலகினார்.

இந்த நிலையில் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி தொடங்கும் 16ஆவது ஐபிஎல் சீசனில் பும்ரா பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பும்ராவை மறந்துவிட்டு உமேஷ் யாதவ் உடன் பணி நிர்வாகம் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் மதன் லால் கருத்து தெரிவித்துள்ளார்.

உமேஷ் யாதவ் உலக டெஸ்ட் சாம்பியன் இறுதி போட்டிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறிய மதன் லால் இறுதிப் போட்டியில் குறைந்தபட்சம் மணிக்கு மூன்று வேகப்பந்து பேச்சாளர் தேவை. அதனால் அணியில் தற்போது உள்ளவர்களை பயன்படுத்துங்கள் என கூறியுள்ளார்.