திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோம்பைப்பட்டி பகுதியில் ஏராளமான தோட்டங்கள் அமைந்துள்ளது. இங்கு மக்காச்சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, இரவு நேரங்களில் தனியாகவும், கூட்டமாகவும் கோம்பைபட்டி பகுதியில் காட்டு யானைகள் உலா வருகிறது.

எனவே யானைகளை விரட்டுவதற்காக 6 பேர் கொண்ட சிறப்பு குழுவினர் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். யானைகள் நடமாட்டம் இருப்பதை விவசாயிகள் அறிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல் இரவு நேரத்தில் தோட்ட பகுதியில் தங்குவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.