
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கொடா மாவட்டத்தில் லட்ரா தொகுதியை சேர்ந்த முன்னாள் பாஜக எம்.எல்.ஏ பவானி சிங் ராஜ்வத். கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி கோவில் புரண அமைப்பு வேலைப்பாடுகள் நிறுத்தப்பட்டதால் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து வனத்துறை அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போது திடீரென வனத்துறை அதிகாரியின் அலுவலகத்திற்குள் நுழைந்த பவானி சிங் வனத்துறை அதிகாரியை கன்னத்தில் அறைந்துள்ளார். இது குறித்து வனத்துறை அதிகாரி காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பவானி சிங்கை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். நீதிமன்றத்தில் 10 நாள் பாதுகாப்பில் இருந்த பவானி சிங் பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பவானி சிங் குற்றவாளி என அறிவித்தார். மேலும் பவானி சிங்குக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 20000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.