வடகிழக்கு இந்தியாவில் உள்ள மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் இருந்து மூன்று மணிநேர பயண தொலைவில் காங்தாங் எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கு என ஒரு தனி மெட்டு உருவாக்கப்படுகிறது. அதாவது ஜிங்ர்வாய் ஐயாவ்பேய் என அழைக்கப்படும் இந்த பாரம்பரியம் பல நூற்றாண்டுகளாக தொடரப்பட்டு வருகிறது. இதில் விசில் அடிப்பதைப் போன்ற அந்த மெல்லிசை அந்த குழந்தையின் அடையாளமாக திகழ்கிறது.

மெட்டிற்கு தகுந்தார் போல் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பெயர் சூட்டுகிறார்கள். இந்த மெட்டு அதிகாரப்பூர்வ பதிவுகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தனித்துவமான இந்த மெட்டு சில வினாடிகள் முதல் 30 வினாடிகள் வரை இருக்கிறது. இந்த மெட்டு குழந்தையின் மீதான தாயின் காதல் பாடல். அதாவது ஒரு தாய் குழந்தையின் மீதான அன்பை வெளிப்படுத்தும் மெட்டாக இது கருதப்படுகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஒரு குழந்தைக்கான அமைப்பு மற்றொரு குழந்தைக்கு இருக்காது என்பதுதான் தனித்துவமானதாகும்.