
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் 35 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது கணவனுக்கும் இடையில் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அந்தப் பெண் தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் தனது கணவனுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அப்பெண்ணின் கணவரிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் தனது மனைவியை நோட்டமிடுவதற்காக அவரது அறைக்குள் ஸ்பை கேமரா பொருத்தி வைத்துள்ளார். இது தெரியாமல் அந்த பெண் தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்துள்ளார். கேமராவில் பதிவான காட்சிகளை அப்பெண்ணின் கணவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் அப்பெண்ணின் கணவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.